செப்டம்பர் மாதம் நடக்கும் 4 கிரக பெயர்ச்சி : ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்
ஒவ்வொரு மாதம் பிறக்கும் போது கிரகங்கள் தங்களின் இயக்கத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றன.இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
அதன்படி செப்டம்பரில் நான்கு கிரகங்கள் தங்களின் நிலையை மாற்றிக்கொள்ளப் போகின்றன.
இந்த மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு தீமைகளையும் ஏற்படுத்தப்போகிறது.
கிரக மாற்றங்கள்
கிரகங்களின் ராஜாவான சூரியன், கிரகங்களின் தளபதியான செவ்வாய், கிரகங்களின் இளவரசரான புதன் மற்றும் செல்வத்தின் அதிபதியான சுக்கிரன் ஆகிய சக்திவாய்ந்த கிரகங்கள் அனைத்தும் செப்டம்பரில் தங்கள் ராசிகளை மாற்றப்போகின்றன.
[A0YPX5 ]
இந்த மாற்றங்கள் சில ராசிகளுக்கு சிறப்பான அதிர்ஷ்டத்தையும், நற்பலன்களையும் வழங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் | செப்டம்பர் மாதத்தில் நிகழும் கிரகப் பெயர்ச்சிகள் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளை அளிக்கப் போகிறது. சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் அவர்களின் வாழ்க்கையில் பல திருப்பங்களைக் கொண்டுவரப்போகிறது. இந்த காலகட்டத்தில் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் தொழில் முன்னேற்றங்கள் ஏற்படலாம், அதே நேரத்தில் வியாபாரிகள் நேர்மறையான முன்னேற்றங்கள் மற்றும் நிதி ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். அவர்களின் பொருளாதார நிலை மேம்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரக்கூடும். மேலும், அவர்களின் முடிவெடுக்கும் திறன்கள் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வணிகம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும். |
மிதுனம் | மிதுன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் நடக்கப்போகும் கிரக மாற்றங்கள் அபரிமிதமான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆடம்பரமும், வசதிகளும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் சாதனைகளை இரட்டிப்பாகும். அவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் முயற்சியில் இப்போது மிகவும் வேகமாக முன்னேறுவார்கள். இந்த மாதத்தில் சில செல்வாக்கு மிக்கவர்களின் நட்புகள் கிடைக்கும், இந்த புதிய நட்பு அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த மாதம் அவர்களுக்கு அங்கீகாரமும், புகழும் தேடி வரப்போகிறது. அவர்களின் முதலீடுகள் எதிர்பார்த்ததை விட பெரிய லாபத்தைக் கொடுக்கும். கிரகங்களின் மாற்றங்கள் அவர்களின் உறவுகளில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவர உதவுகின்றன. |
கடகம் | கடக ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் பல நேர்மறையான மாற்றங்களை அனுபவிப்பார்கள். இந்த மாதத்தில் நடக்கப்போகும் கிரக மாற்றங்கள் அவர்களை வாழ்க்கையில் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த மாதத்தின் சிறப்பு என்னவென்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் சிறந்த காலகட்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த மாதம் அவர்கள் பணக் கஷ்டத்தில் இருந்து நிவாரணம் பெறலாம், புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும். திருமணமாகாதவர்களுக்கு பொருத்தமான திருமண வரன்கள் வரலாம், அதே நேரத்தில் ஏற்கனவே திருமனமானவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் முன்னேற்றம் கவனிக்கத்தக்கதாக இருக்கும், அவர்கள் சில சாதனைகளை செய்யலாம். இந்த யோகத்தால் அவர்கள் அதிர்ஷ்டக்கதவு திறப்பதால் திடீர் ஆதாயங்கள் கிடைக்கலாம். இந்த மங்களகரமான காலம் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் உறுதி செய்கிறது. |
🛑 DISCLAIMER : இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும், ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ஐபிசி தமிழ் தளம் இதற்கு பொறுப்பேற்காது. |
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்... |

