கனடா உட்பட மூன்று நாடுகளை மையமாக கொண்ட மாபெரும் இசை நிகழ்ச்சி
இலங்கை, கனடா, மலேசியா ஆகிய மூன்று நாடுகளை மையமாக வைத்து இந்திய இசைக் கலைஞர்கள் தலைமையில் மாபெரும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.
சம்பந்தப்பட்ட மூன்று நாடுகளை அடிப்படையாக கொண்டு தொடர் கச்சேரிகளை ஆரம்பிக்கும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது.
பிரபல தென்னிந்திய பாடகர்கள்
தேவா, ஹரிஹரன், முரளி, கிருஷ்ணராஜ், ஸ்ரீகாந்த், அனுராதா, அஜய்கிருஷ்ணா, பூஜா, அல்கா, அஜித், மனோ, சத்யபிரகாஷ், திவாகர் மற்றும் பல பிரபல மற்றும் திறமையான கலைஞர்கள் இந்த கச்சேரி தொடரில் இணைய உள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
இந்த இசை நிகழ்ச்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், இந்நாட்டு ரசிகர்களுக்கு இந்த இசை நிகழ்ச்சி உற்சாகமூட்டும் அனுபவமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
