13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
Sri Lanka Police
Colombo
Sri Lankan Peoples
By Jaso
2026.01.23 அன்று கோட்டை காவல்துறை பிரிவில் உள்ள காலி கோல் பேஸில் 13 வயது சிறுமி கடத்தப்பட்டு, கடுமையாக பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, சந்தேக நபரின் வரைபடத்தை காவல்துறை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.
காவல்துறையின் அறிவிப்பு
மேலும் அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

தொலைபேசி எண்கள் – கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரி – 071-8591560, 011-2432635
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |