கொழும்பில் தடம்புரண்ட தொடருந்து : சேவைகளில் பாதிப்பு
கொழும்பு - கோட்டை பகுதியில் தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக கரையோரப் பாதையில் பயணிக்கும் தொடருந்து சேவைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி நேற்று (19) இரவு 7.15 மணி அளவில் பயணித்த அதிவேக தொடருந்து கோட்டை மற்றும் கொம்பனித்தெரு தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக, தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் தொடருந்து தண்டவாளத்தை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் தொடருந்து திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபோலகே குறிப்பிட்டார்.
4 தொடருந்து சேவைகள் ரத்து
தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக நேற்றிரவு காலி அஞ்சல் தொடருந்து உட்பட 4 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று (20) காலை கொழும்பில் இருந்து செல்லும் தொடருந்துகள் தாமதமாகச் செல்லும் என்றும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு பகுதி தொடருந்து பாதையை காலை 7 மணிக்குள் இயக்க முடியும் என்று பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபோலகே தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 9 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்