7 மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமனம்
sri lanka
people
gotabaya rajapaksha
By Shalini
சட்டமா அதிபர் திணைக்களத்தின் 7 மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்களான மிலிந்த குணதிலக்க, ஹரிப்ரியா ஜயசுந்தர, விக்கும் ஆப்ரு, ஷானக்க விஜேசிங்க, ரவிந்திர பத்திரனகே, நெரின் புள்ளே மற்றும் சேதிய குணதிலக்க ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் எதிர்வரும் நாட்களில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
இந்த நியமனங்கள் தொடர்பிலான ஆவணங்களை ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்தா ரோஹனவீர உயர் நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி