புராதன கற்குகையொன்றில் புதையல்? ஏழு பேர் கைது
arrest
police
sri lanka
balangoda
By Shalini
பலாங்கொடை - வெலிக்கபொல கல் பாய காட்டுப் பிரதேசத்தில் புராதன கற்குகையொன்றில் புதையல் தோண்டிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து உரிய இடத்தை முற்றுகையிட்டு பொலிசார் நேற்று இவர்களை கைது செய்துள்ளனர்.
பலாங்கொடை கல்பாய புராண ரஜ மகா விஹாரைக்கு அண்மித்த காட்டில் உள்ள கற்குகையினுள் இவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது பொலிசாரால் அதிரடியாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடம் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. பொலிசார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி