மன்னாரில் வறட்சியின் கோரம் - வற்றியுள்ள நீர்நிலைகள்!
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவிவரும் வறட்சியான காலநிலை காரணமாக மாவட்டத்தில் சிறுபோக செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் உட்பட கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் தோட்டசெய்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆறு மாதங்களாக மழை இன்மையால் மன்னார் மாவட்டத்தில் நீர்நிலைகளில் நீரின் அளவு முழுமையாக குறைவடைந்துள்ளது. அதேநேரம் சிறிய குளங்கள் கால்வாய்கள் முற்றாக வரண்டுபோய் உள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
பல பாதிப்புக்கள்
wea
குறிப்பாக கடந்த மாதம் மன்னார் மாந்தைப் பகுதியில் சிறுபோக பயிர்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளின் நெற்செய்கையும் கருகியுள்ளதுடன் கத்தரி, கச்சான் போன்ற தோட்ட செய்கைகளும் முற்றாக பாதிப்படைந்துள்ளது.
அதேநேரம் கால்நடைகளும் விலங்குகளும் குடிநீர் இன்றி இறக்கும் சம்பவங்களையும் காணக்கூடியதாக உள்ளதுடன் இன்னும் சில பகுதிகளில் வறட்சி காரணமாக கிணற்று நீர் வற்றியுள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன.