மின்வெட்டு - மின்வெட்டு இல்லை- முட்டி மோதும் அரச நிறுவனங்கள்
எதிர்வரும் மூன்று மாதங்களில் கடுமையான மின்வெட்டு தவிர்க்க முடியாதது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் எவ்வித தடைகள் வந்தாலும் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு ஏற்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீர் முகாமைத்துவம் தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு எவ்வித பொறுப்பும் இல்லை எனவும் அதன் அதிகாரம் நீர் முகாமைத்துவ அதிகாரசபை எனவும் பொறியியலாளர் சங்க தலைவர் சௌமிய குமார சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் இல்லாமல், மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றியுள்ள நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருந்தால், மின்சாரத்தை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார்.
அதன்படி எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
ஆனால் எவ்வாறான தடைகள் வந்தாலும் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு ஏற்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்சாரத்தை நிர்வகிக்கும் முறைகள் பயன்படுத்தப்படும் என்றும் அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
