சஞ்சீவ கொலைக்கு பின்னர் எப்படி தப்பினார் செவ்வந்தி..! விசாரணையில் அவர் கக்கும் அதிர்ச்சி தகவல்கள்
பெப்ரவரி 19 அன்று அளுத்கடே நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, தற்போது கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அங்கு, கெஹெல்பத்தர பத்மேவுடனான தனது உறவு பற்றிய தகவல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார், போதைப்பொருள் வியாபாரியான முன்னாள் காதலன் மூலம் கெஹெல்பத்தர பத்மேவை சந்தித்ததாகக் கூறினார்.
சஞ்சீவ கொலைக்கு பணம் வாங்கவில்லை
பின்னர், கெஹெல்பத்தர பத்மே, கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்காவை அறிமுகப்படுத்தினார்.
மேலும் " எப்படியாவது அவனை வைத்து வேலையைச் செய்து கொள்" என்று 'பத்மே' தனக்குக் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, அவருடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு கொலையைச் செய்யுமாறு தான் அவரை இயக்கியதாகவும் இஷாரா தெரிவித்துள்ளார்.
கெஹெல்பத்தர பத்மேவுடனான தனது நெருங்கிய உறவு காரணமாக இந்த வேலைக்கு எந்தப் பணத்தையும் வாங்கவில்லை என்றும் இஷாரா கூறியுள்ளார்.
கொலைக்கு பின்னர் எப்படி தப்பினார்
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட அதே நாளான பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு, வெலிபென்னவில் உள்ள ஒரு வீட்டில் தான் இரவைக் கழித்ததாகவும், மறுநாள் தொடங்கொடவில் உள்ள ஒரு வீட்டில் ஒன்றரை மாதங்கள் தங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் ஏப்ரல் 13 ஆம் திகதி தொடங்கொடவிலிருந்து மித்தெனியவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றார்.
புத்தாண்டு காலம் என்பதாலும், காவல்துறை அதிகாரிகள் புத்தாண்டு பணியில் இருந்ததாலும் அவர்கள் அந்த நாளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்ற அன்று, அவர் யாழ்ப்பாணத்திற்குச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த நாளில் காவல்துறை அதிகாரிகள் தேர்தல் பணியில் இருந்ததால் அந்த நாளைத் தேர்வு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் தான் எந்த கைபேசியையும் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தங்கியிருந்த வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட செவ்வந்தி
இதற்கிடையில், இஷாரா செவ்வந்தி இன்று மதுகம பகுதிக்கும், பின்னர் அவர் தங்கியிருந்த மித்தெனியவில் உள்ள வீட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டார்.
கொழும்பு குற்றப்பிரிவு, அவர் தங்கியிருந்த வெலிபென்ன வீட்டின் உரிமையாளரையும், அளுத்கம காவல்துறையில் பணியாற்றும் அவரது மருமகனும், காவல்துறை கான்ஸ்டபிளையும் கைது செய்துள்ளனர்.
தொடங்கொட வீட்டில் அவருக்கு தங்குமிடம் வழங்கிய நபரையும், மித்தெனிய பகுதியில் அவருக்கு தங்குமிடம் வழங்கிய பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எனினும், அந்தப் பெண் பசுவை வெட்ட முயன்றதற்காக கைது செய்யப்பட்ட நில மீட்புக் கூட்டுத்தாபன ஊழியரின் மனைவி என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி. சஞ்சீவ தர்மரத்னவின் அறிவுறுத்தலின் பேரில், கொழும்பு மாவட்ட டி.ஐ.ஜி. நிஷாந்த சில்வாவின் மேற்பார்வையின் கீழ், கொழும்பு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
