கனடாவில் பல சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது
25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பல பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக கனடாவின் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 70 வயது நபரை ரொறன்ரோ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறை வெளியிட்ட தகவலின் படி, தற்போது 70 வயதாகும் அரசகுமார் சபரிமுத்து என்பவர் 1994 முதல் 1996 வரையான காலகட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.
9 முதல் 14 வயதுடைய சிறார்களை இவர் துஸ்பிரயோகம் செய்துள்ளது ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
தமக்கு நெருக்கமான மற்றும் நன்கு அறிமுகமான சிறார்களையே இவர் வன்புணர்வு செய்துள்ளதும், ஸ்கார்பரோ பகுதியில் பல இளம் பெண்களை இவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதும் காவல்துறையின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், ஒக்டோபர் 28ஆம் திகதி, அரசகுமார் சபரிமுத்து மீது உத்தியோகபூர்வமாக 13 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நபரால் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும், அவர்களும் காவல்துறை அதிகாரிகளை அணுகி நடந்தவற்றை புகாராக தெரிவிக்க வேண்டும் என விசாரணை அதிகாரிகள் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
Man charged in historical Sexual Assault investigations, Arasakumar Saveremuthu, 70, facing thirteen charges, Police concerned there may be more victims https://t.co/1ST7v2lWWu
— Toronto Police (@TorontoPolice) November 10, 2021