ரசிகரின் கன்னத்தில் அறைந்த பிரபல கிரிக்கெட் வீரர்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் சகிப் அல் ஹசன் அந்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
பங்களாதேஷின் 12-ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், நேற்று(7) வாக்குப்பதிவு நடைபெற்று வாக்கு எண்ணும் பணியும் தொடங்கியது.
ஆளும் கட்சியான அவமி லீக் கட்சி சார்பில் மகுரா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட சகிப் அல் ஹசன் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஷகிப் அல் ஹசன்
இந்த வரலாற்று வெற்றியை தொடர்ந்து பங்களாதேஷ் நாடாளுமன்ற உறுப்பினராக சகிப் அல் ஹசன் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றிப்பெற்ற சகிப் அல் ஹசனை வாழ்த்துவதற்காக சுற்றிவளைத்த ரசிகர்களில் ஒருவரை அவர் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் சகிப் அல் ஹசனை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
வரலாற்று வெற்றி
ஏற்கனவே இவ்வாறான பல சர்சைகளுக்கு பெயர் போன சகிப் அல் ஹசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகியும் இவ்வாறான செயல்களில் ஈடுப்படுவது தொடர்பில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் தனது பிரச்சாரத்தில் கவனம் செலுத்த விளையாட்டிலிருந்து சிறிது இடைவெளி எடுத்திருந்த நிலையில் அவர் இன்னும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Shakib is Back?#Bangladesh #BangladeshElection pic.twitter.com/fjonsIcHbN
— Unnecessary Cricket Council (@ourucc) January 7, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! |