கிழக்கின் அவமானம் பிள்ளையான் : இரா.சாணக்கியன்

Sri Lanka Parliament Shanakiyan Rasamanickam Sri Lanka Sivanesathurai Santhirakanthan
By Sathangani Sep 23, 2023 05:43 AM GMT
Report

”கிழக்கின் அவமானம் பிள்ளையான் என்னும் சந்திரகாந்தன், பல கொலைகளுக்கு காரணமான  இவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என இரா.சாணக்கியன்  தெரிவித்துள்ளார். 

கடந்த இரு நாட்களாக( 21,22)  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும், அது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட சமூகம் சார்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: பல்டியடித்தார் முன்னாள் அதிபர் மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: பல்டியடித்தார் முன்னாள் அதிபர் மைத்திரி


மயிலத்தமடு போராட்டம்

”ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் பல கொலைகள் தொடர்பிலும் அசாத் மெளலானாவினால் குற்றம் சாட்டப்பட்ட பெயர் குறிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை அவர்களுக்கான நடவடிக்கை என்ன? அவற்றினைத் துரிதப்படுத்த வேண்டும்.

கிழக்கின் அவமானம் பிள்ளையான் : இரா.சாணக்கியன் | Shame Of The East Pillaiyan I Chanakyan

பல கொலைகள் உடன் சம்பந்தப்பட்ட திரிபோலி பிளட்டூன் (கூலிக்கு கொலை செய்யும் படைப்பிரிவு) அமைப்பினை சேர்ந்த பலர் இன்றும் சுகந்திரமாக உள்ளனர்.

அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள இருக்கின்றது. அவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் இல்லையா? கிழக்கில் எமக்கும் இவர்களினால் அச்சுறுத்தல் எழலாம்.

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்


மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் பண்ணையளர்களினால் தொடர்ச்சியாக வீதி ஒரங்களில் கொட்டும் மழையிலும் வெயிலிலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் கோரிக்கையை முன்வைத்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களுக்கான தீர்வினை அரசு உடனடியாக பெற்றுத்தர வேண்டும்.

அரசு இனங்களுக்கு இடையில் குழப்பத்தினை ஏற்படுத்தி இன முறுகல் நிலைக்கு வித்திடாமல் அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்க்கொள்ள வேண்டும்.

செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமை

அத்துடன் திருகோணமலையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்வலத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தாக்கப்பட்டதற்கு பின்னால் சிறிலங்கா  இராணுவப் பிரிவினரின் திட்டமிட்ட செயல்.

கிழக்கின் அவமானம் பிள்ளையான் : இரா.சாணக்கியன் | Shame Of The East Pillaiyan I Chanakyan

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் : நாடாளுமன்றில் சார்ள்ஸ் நிர்மலநாதன்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் : நாடாளுமன்றில் சார்ள்ஸ் நிர்மலநாதன்


அவர் ஒரு பாதையில் செல்வதாக இருந்தது பின்பு பாதை மாற்றப்பட்டு புதிய பாதை வழியே சென்று கொண்டிருந்தார். அது இராணுவப் புலனாய்வாளர்களுக்கு மட்டுமே தெரிந்து இருந்தது. இதிலிருந்து எமக்கு சந்தேகம் வருகின்றது இத்தாக்குதலுக்கு இவர்களே காரணம் என்று.

லண்டன் பல்கலைக்கழகத்தினது (UNIVERSITY OF LONDON)  சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகப் படிப்பு (Executive Course in Post-Legislative Scrutiny) அமுலாக்கப்படும் சட்டங்கள் சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டிருப்பினும் சரியான முறையில் பயன்படுதப்படுகின்றதா என்பது தொடர்பான கற்கைநெறிக்கு கடந்த ஐந்து நாட்களாக லண்டன் சென்றிருந்தேன்.

இதன் நோக்கமானது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பினும் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அவற்றினை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது தொடர்பில் இக்கற்கை நெறிகள் இருந்தன.

அதனடிப்படையில் எமது நாட்டிலும் பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றன அவற்றினை அரசு மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்தார்.



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கோண்டாவில்

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Brampton, Canada

25 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Montreal, Canada

01 Apr, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, East Ham, United Kingdom

31 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பெரியபோரதீவு முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரிஸ், France

30 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Neuss, Germany

06 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை, யாழ்ப்பாணம், நெடுங்கேணி, திருகோணமலை, நெதர்லாந்து, Netherlands, Milton Keynes, United Kingdom

07 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

06 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

அனலைதீவு, வவுனிக்குளம், Toronto, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கல்வியங்காடு, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

05 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

இடைக்காடு, Markham, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023