யாழ் குடாநாட்டை முழுமையாக முடக்க அணிதிரளுங்கள்! பகிரங்க அழைப்பு
srilanka
shanakiya rasamanickam
jaffna protest
By Vasanth
யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றதுடன், தற்போது பேரணி மன்னார் மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது. அங்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
இதன்போது மன்னாரில் கிடைத்த பாரிய ஆதரவு கண்டு தாம் நெகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது நகைச்சுவையான விடயம் இல்லை எனவும், மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் குறித்த பேரணியில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி