ரணில் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல : ஐக்கிய தேசிய கட்சி பகிரங்க அறிவிப்பு

Ranil Wickremesinghe Sri Lankan political crisis Election Political Development Current Political Scenario
By Shalini Balachandran Aug 01, 2024 09:53 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

நாட்டு மக்களின் நலன்கருதியே சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி செயற்பட்டார் மாறாக அவர் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை தேர்தல் தொகுதியின் வலய அமைப்பாளர் மற்றும் கொத்மலை அரசியல் அதிகார சபையின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ரணில் மொட்டு கட்சிக்காக அல்லாமல் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்தார். அதனால் தான் இன்று ஜனாதிபதிக்கு எதிராக வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முடிவுக்கு மொட்டு கட்சி வந்துள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது : நாமல் பகிரங்கம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது : நாமல் பகிரங்கம்

அதிகார ஜனாதிபதி

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் இதற்குரிய ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.

ரணில் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல : ஐக்கிய தேசிய கட்சி பகிரங்க அறிவிப்பு | Shanmugam Thiruchelvam Comment On President

இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்நாடு அதலபாதாளத்துக்குள் விழுந்திருந்தது எனினும் எதற்கும் அஞ்சாது சவால்களை கண்டு ஒதுங்காது நாட்டை பொறுப்பேற்று இன்று நல்ல நிலைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொண்டுவந்துள்ளார். தனி ஒரு ஆளாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்த கட்சியுடன் இணைந்து இதற்குரிய வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுத்திருந்தார்.

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு : இராதாகிருஷ்ணன் உறுதி

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு : இராதாகிருஷ்ணன் உறுதி

பொருளாதார அபிவிருத்தி 

அந்தவகையில் எமது நாடு இன்று பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைந்து வருகின்றது குறுகிய காலப்பகுதிக்குள் வங்குரோத்து நிலையில் இருந்து ஜனாதிபதியால் இலங்கை மீட்டெடுக்கப்பட்டமை தொடர்பில் உலக நாடுகளும் சர்வதே அமைப்புகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றன. எனினும் எதிர்க்கட்சி தலைவர் உட்பட எதிரணி உறுப்பினர்கள் மற்றும் சில குழுவினர் போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.

ரணில் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல : ஐக்கிய தேசிய கட்சி பகிரங்க அறிவிப்பு | Shanmugam Thiruchelvam Comment On President

ஜனாதிபதி தேர்தல் நடக்காது அதனை ஜனாதிபதி ஒத்திவைப்பார் என்றெல்லாம் போலி குற்றச்சாட்டுகளை மக்கள் மயப்படுத்தினர். இவையெல்லாம் போலியானவை என்பது மக்களுக்கு இன்று தெரிந்துவிட்டது எமது ஜனாதிபதி நாட்டின் அரசமைப்பு மற்றும் சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்படுபவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முதல் ஆளாக அவரே கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

சுயாதீன வேட்பாளர்

தான் தேர்தலுக்கு அஞ்சுபவன் அல்ல என்பதைக்கூறி எதிரணிகளின் வாயை அடைக்கச் செய்துள்ளார். நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன்தான் மொட்டு கட்சியுடன் ஜனாதிபதி இணைந்து செயற்பட்டார் இது தெரியாமல் ராஜபக்ச குடும்பத்தைக் காக்கவே ரணில் விக்ரமசிங்க ரணில் ராஜபக்சவாக மாறிவிட்டார் எனவும் எதிரணிகள் குற்றஞ்சாட்டின.

ரணில் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல : ஐக்கிய தேசிய கட்சி பகிரங்க அறிவிப்பு | Shanmugam Thiruchelvam Comment On President

ஆனால் இன்று சுயாதீன வேட்பாளராகவே ரணில் விக்ரமசிங்க களமிறங்கவுள்ளார் மொட்டு கட்சி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தனி வேட்பாளரை களமிறக்கவுள்ளது இதனால் போலிக்குற்றச்சாட்டை முன்வைத்த எதிரணிகள் தலைகுனிந்துள்ளன அதேபோல ராஜபக்சாக்களுக்காக அல்ல நாட்டு மக்களுக்காகவே ரணில் விக்ரமசிங்க தீர்மானங்களை எடுத்தார் என்பதும் இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் ராஜபக்சக்களின் காவலன் எனில் மொட்டு கட்சி எதற்காக தனி வேட்பாளரை களமிறக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துவிட்டனர். எனவே அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் நல்ல முடிவை எடுக்க வேண்டும். நாட்டின் நலன் கருதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்: இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலுக்கு ஈரான் உத்தரவு

மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்: இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலுக்கு ஈரான் உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022