மீண்டும் சிறை செல்லும் மகிந்தவின் உறவினர்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் சந்தேகத்தின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.
சிகிச்சை குறித்த முழு அறிக்கை
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டதரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு தலைமை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதன்போது சிறைச்சாலை மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளில் சந்தேக நபருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த முழு அறிக்கையையும் அடுத்த நாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கும் நீதவான் உத்தரவிட்டார்.
