இராணுவத்தளபதி சவேந்திர சில்வா வெளியிட்ட செய்தி
vaccine
sri lanka
people
shavendra silva
By Shalini
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 94 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதுவரை 27.2 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 94 இலட்சத்து 14,852 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தற்போது 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேட்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் திட்டமும் சிறப்பாக முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.