அரசியலில் நுழைகிறார் முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திரசில்வா…!
முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் சவேந்திர சில்வா அரசியலில் நுழையப் போவதாக சமூக ஊடகங்களில் செய்திகளும் பதிவுகளும் பரவி வருகின்றன.
ஓய்வுபெற்ற ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அரசியலில் நுழையத் தயாராக இருப்பதாக அந்தச் செய்திகளும் பதிவுகளும் குறிப்பிடுகின்றன.
அதன்படி, எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வட மத்திய மாகாண சபையில் வேட்பாளராகப் போட்டியிட அவர் தயாராக இருப்பதாகவும் அந்தச் செய்திகளும் பதிவுகளும் குறிப்பிடுகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டி
மேலும், வட மத்திய மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி போட்டியிடுவார் என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

எனினும் இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிடம் கொழும்பு ஊடகமொன்று விசாரித்தபோது, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளும் பதிவுகளும் பொய்யானவை என நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |