இந்திய இராணுவ தளபதி முன்னிலையில் சிறிலங்கா இராணுவ தளபதி வெளியிட்டுள்ள தகவல்கள்
வரலாறு நெடுகிலும் சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா பயிற்சி உள்ளிட்ட பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தில் பல அதிகாரிகள் இந்திய இராணுவ கல்லூரிகளில் பயிற்றப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இன்று சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை(shavendra srilva) சந்தித்த கலந்துரையாடியிருந்தார்.
இதன் பின்னர் சிறிலங்கா இராணுவ தளபதியினும் இந்திய இராணுவ தளபதியும் செய்தியாளர்களிடம் பேசியிருந்தனர். இதன்போது பேசிய சிறிலங்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வா,
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே உள்ளிட்ட தூதுக் குழுவை, சம்பிரதாயபூர்வமாக வரவேற்று, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சுமுக இராணுவ தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.
வரலாறு நெடுகிலும் சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா பயிற்சி உள்ளிட்ட பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தில் பல அதிகாரிகள் இந்திய இராணுவ கல்லூரிகளில் பயிற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் எமது இராணுவத்தின் படையணிகளில் ஒன்றான கஜபா படையணியின் வருடப் பூர்த்தியை முன்னிட்டு இடம்பெறும் மரியாதி அணிவகுப்பிலும், மித்ர சக்தி கூட்டுப் பயிற்சிகள் தொடர்பிலான நிகழ்விலும் இந்திய இராணுவ படைகளின் பிரதானியுடன் இணைந்து பங்கேற்கவுள்ளேன் என்றார்.









