இலங்கையை முழுமையாக திறப்பது எப்போது? இராணுவ தளபதி அறிவிப்பு
srilanka
covid19
corona
army
shavendra silva
By S P Thas
எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று பரவலின் தன்மையை பொறுத்த இது சாத்தியமாகும் என இன்று தென்னிலங்கை தொலைக்காட்சியில் இடம்பெற்ற விசேட நிகழ்ச்சியில் அவர் குறப்பிட்டார்.
இதேவேளை முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு வெளிநாட்டு பயணிகளுக்காக நாட்டை திறக்கவும் எதிர்பாத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 இலட்சம் பேரின் தகவல்கள் தொடர்பிலான தரவுகளில் சிக்கல்கள் நிலவுவதாகவும் அவர் கூறினார்.
முதல் தடுப்பூசி திட்டத்தின் போது சுகாதாரத் துறையினரால் தரவுகளை சேகரித்த சந்தர்ப்பத்தில் பெரும்பாலும் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி