நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது!! பயணத் தடை நீடிக்கப்படுகிறதா? இராணுவ தளபதி அறிவிப்பு
covid19
corona
shavendra silva
By S P Thas
பயணக்கட்டுப்பாடு நல்ல பலனை அளித்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,
பயணத்தடை குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. நாட்டில் கொவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை உன்னிப்பாக அவதானிக்கப்படுவதுடன் மீளாய்வு செய்யப்படும்.
இதேவேளை, பயணக்கட்டுப்பாடு நல்ல பலனை அளித்துள்ளதாகவும் சில சந்தர்ப்பங்களில் கட்டுப்பாட்டு விதிகளை சிலர் மீறியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்