பிரித்தானிய தடையின் பின் புதிய அவதாரம் எடுக்கப் போகும் சவேந்திர சில்வா
மூன்று முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் ஒரு முன்னாள் துணை அமைச்சர் மீது தடைகளை விதிப்பதாக பிரித்தானியா (United Kingdom) அறிவித்திருந்தது.
குறித்த விடயத்தை நேற்று முன்தினம் (24) பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்திருந்தது.
இதனடிப்படையில், முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva), முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட (Wasantha Karannagoda), முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜெயசூர்யா (Jagath Jayasuriya) மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் - Karuna Amman) ஆகிய நான்கு நபர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி, பிரித்தானிய தடை குறித்து பொதுஜன பெரமுனவின் அரசியல் தலைமைகள் தங்களது கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்த நிலையில், அரசு தரப்பிலிருந்து எவ்வித விடயமும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில், குறித்த தடையிற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) கண்டனம் வெளியிட்டிருந்தார்.
அத்தோடு, பிரித்தானியா தடை விதித்ததன் பின்னணியில் கனடா (Canada) மற்றும் அந்த நாட்டின் நீதியமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் (Gary Anandasangaree) அழுத்தம் காணப்படுவதாக முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான தயான் ஜயதிலக்க (Dayan Jayatilleka) கருத்து தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இந்த விவகாரம் தொடர்பில் தொடர் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த தடை தொடர்பிலான பிண்ணனி மற்றும் இது தொடர்பில் அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
