ஷி யான் 6 இன் தந்திரமான நகர்வு : தரித்து நிற்கும் காலத்தை நீடிக்க திட்டம்
ஆய்வுகளில் தாமதம் இருப்பதாக பாசாங்கு காட்டி ஆய்வுக்கான காலத்தினை இன்னொரு நாளுக்கு நீடிக்கும் முயற்சியில் ஷி யான் 6 கப்பல் ஈடுபடுகின்றது.
நேற்று முன் தினமே (29) ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்ட போதிலும், இன்று (31) தான் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதான ஒரு தோற்றப்பாட்டினை இந்த ஆய்வுக்கப்பல் வெளியிட்டிருப்பதால் நாளையும் (01) இதன் ஆய்வுப்பணிகள் இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளன.
ஆனால் உண்மையிலேயே ஷி யான் 6 இன் ஆய்வுகள் இன்றுடன் முடிவடைந்து அது தனது தாய் நாடு நோக்கி பயணமாகியிருக்க வேண்டும்.
ஆனால் தந்திரோபாயமாக ஒரு நாளை அதிகமாக இந்த ஆய்வுக்கப்பல் பயன்படுத்த முயற்சிப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இலங்கையின் மேற்குக்கடற்பரப்பிலுள்ள கடல்நீரின் உப்பின் தன்மை மற்றும் நீரின் வெப்பநிலை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டாலும்.
உண்மையிலேயே இந்தக்கப்பல் நீர்மூழ்கிகளின் கடலடித்தடங்கள் தொடர்பான வரைவுகளை செய்வதற்காக இரகசியமாக செயற்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவை சமாளிப்பதற்காக சீன ஆய்வாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் உற்று அவதானித்தபடி உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் ஒரு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது.
அதேவேளை இந்தக்கப்பலின் அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கு இலங்கை விஞ்ஞானிகளுக்கோ, கடற்படை அதிகாரிகளுக்கோ அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறிருக்கையில் இது வெறுமனே ஆய்வுகளை மட்டும் மேற்கொள்ள வந்துள்ளது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் உண்மை என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் இதுபோன்ற இலங்கை மற்றும் உலக நிலவரங்களை தெரிந்து கொள்ள இன்றைய செய்தி வீச்சு நிகழ்ச்சியை காண்க.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 10 மணி நேரம் முன்