மனைவி கொடுமை : இந்திய கிரிக்கெட் வீரருக்கு விவாகரத்து
மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் தொடரப்பட்ட வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகன் தவானுக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி குடும்ப நீதிமன்றம் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மற்றும் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜிக்கு நேற்று முன்தினம் விவாகரத்து வழங்கியது.
கணவன்-மனைவியாக வாழவில்லை
11 ஆண்டு திருமணத்தை கலைத்த நீதிபதி ஹரிஷ் குமாரின் தீர்ப்பில், “இரு தரப்பும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய ஒப்புக்கொண்டதாகவும், அவர்களின் திருமணம் நீண்ட காலத்திற்கு முன்பே முற்றுபெற்று விட்டதாகவும் ஓகஸ்ட் 8, 2020 முதல் அவர்கள் கணவன்-மனைவியாக வாழவில்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” எனவும் குறிப்பிடப்பட்டது.
ஷிகர் தவானுக்கு மனைவி ஆயிஷா மெண்டல் டார்ச்சர் கொடுத்தது உறுதியாகிவிட்டதாக கூறி, இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாக நீதிபதி ஹரிஷ் குமார் அறிவித்தார்.
மனைவிக்கு நீதிமன்றம் இட்ட கட்டளை
மேலும் ஆயிஷா முகர்ஜி, மகனை அடிக்கடி இந்தியா கூட்டி வந்து ஷிகர் தவானுக்கு காட்ட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். அதோடு அவர் காணொளியில் தனது மகனுடன் உரையாடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஷிகர் தவானுக்கு இருந்த குடும்ப பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.