மகனை காணாமல் தவிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்
தனது மகனை கடந்த ஓராண்டுக்கும் மேலாக காணாமல் தவிப்பதாக இந்திய கிரிக்கெட்வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுக்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆயிஷா முகர்ஜி என்பவரை தவான் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஜோரவர் உள்பட 3 குழந்தைகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு ஷிகர் தவானை அவருடைய மனைவி விவாகரத்து செய்துவிட்டு, மகன்களுடன் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து விட்டார்.
நீதிமன்றம் விடுத்த உத்தரவு
எனினும் தவான், தனது மகனை தனக்கு காட்டவேண்டுமென இந்திய நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவரது மனைவிக்கு,நீதிமன்றம் மகனை மூன்று மாதத்திற்கொருமுறை காட்டுமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் ஷிகர் தவான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மகனை காணாமல் தவிக்கும்
அதில் அவர், "உன்னை நேரில் பார்த்து ஒரு ஆண்டை கடந்து விட்டது. சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பு கொண்டும் 3 மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் கடந்த வருடம் பிறந்தநாளின்போது உன்னுடன் காணொளி மூலம் பேசிய பதிவுடன், என் மகனே உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
உன்னை அதிகமாக அப்பா நேசிக்கின்றேன். கடவுள் கிருபையால் அடுத்த முறை உன்னை நேரில் சந்திக்கும் வரை நான் மனத்திடத்துடன் இருப்பேன். உன்னை குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன். உன்னை மிக அதிகமாக நேசிக்கிறேன் ஜோரவர்" என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு ரசிகர்களையும், இணையவாசிகளையும் கண்கலங்க வைத்துள்ளது. ஷிகர் தவானுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு இந்த பதிவை வைரலாக்கி வருகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |