இலங்கை கடற்பரப்புக்கு ஏற்பட்ட அழிவு! கடும் அதிருப்தியில் மைத்திரி
தரப்பு இலங்கையின் கடல் வளம் பாரியளவில் அழிவடைவதற்கு அண்மையில் ஏற்பட்ட கப்பல் விபத்து வழியமைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அண்மையில் பற்றியெரிந்த எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்தக் கப்பல் விவகாரமானது, நாட்டுக்கு முற்று முழுதாக தேவையற்ற ஓர் பிரச்சினையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடல் வளம் பாரியளவில் அழிவடைவதற்கு இந்த கப்பல் விபத்து வழியமைத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் குறித்து அரசாங்கத்துடன் சுதந்திரக் கட்சி அதிகாரபூர்வமாக பேச உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த கப்பல் விவகாரத்துடன் தொடர்புடைய தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.