“இலங்கை இந்தியா” மீண்டும் கப்பல் சேவை - செந்தில் தொண்டமான், வியாழேந்திரன் இந்தியாவில் முக்கிய பேச்சு
india
sri lanka
people
By Shalini
இலங்கை மற்றும் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.
இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு கண்டு, நல்லுறவை வளர்ப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதுச்சேரி மீனவளத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்களும் அரச உயர் அதிகாரிகளும் பங்கேற்றிருந்ததாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.