ஷிராந்தி ராஜபக்ச தொடர்புடைய கொலை: உடந்தையாக இருந்த பேராசிரியர்!
உள்நாட்டு யுத்தத்தை நிறைவு செய்ததற்காக சிங்கள மக்களால் கடவுளாக போற்றப்படும் மகிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது தற்போது தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் நாட்டில் பேசு பொருளாக மாறியுள்ள போதைப்பொருள் கடத்தல்கள், அதன் பின்னணியில் இருக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கு தலைமை தாங்கியவர்கள் ராஜபக்சர்களே என குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறான பின்னணியில், இன்னும் தீர்வுகள் விளக்கங்கள் எதுவுமின்றி தொக்கி நிற்கும் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான சாட்சியங்களும் ராஜபக்சர்களுக்கு எதிராக வெளிவர ஆரம்பித்துள்ளன.
எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் இவ்விடயம் தொடர்பில் மேடைகளில் உரைகளை நிகழ்த்தி வரும் நிலையில் அரசாங்க தரப்பிலிருந்து விசாரணைகள் மும்முரமாக மேந்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாளுக்கு நாள் வெளிவரும் உண்மைகளை வைத்து இதனை உறுதிப்படுத்திக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
இதேவேளை, அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்த “கஜ்ஜா” என்பவர் வசீம் தாஜூதீன் கொலை செய்யப்பட்ட வாகனத்தின் பின்னால் இருந்ததை, கஜ்ஜாவின் மனைவி உறுதிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறு திருப்பங்களுடன் தொடரும் வசீம் தாஜூதீன் கொலைக்கும், ராஜபக்ச தரப்புக்கும் உள்ள தொடர்புகளின் சாட்சியங்களை ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் இன்றைய அதிர்வு.........
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
