உயிருக்கு ஆபத்தாய் மாறியுள்ள இதய நோய்: சிங்கபூர் ஷொப்பிங்-க்கு மத்தியில் ஷிரந்தியின் அறிக்கை

CID - Sri Lanka Police Shiranthi Rajapaksa Singapore
By Dharu Oct 07, 2026 09:21 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, இன்று (7) இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், வெளிநாட்டுப் பயணம் முடித்துத் திரும்பும்போது விமான நிலையத்தில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக, சட்டத்தரணிகள் மூலம் பிணை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

நிலுவையில் உள்ள தனது பிணை மனுவிற்கு ஆதரவாக, தனது 73 வயதான உடல்நிலை குறித்த பல மருத்துவ அறிக்கைகளை அவர் நீதிமன்றத்தில் அப்போது சான்றாகச் சமர்ப்பித்துள்ளார்.

உச்சக்கட்ட பரபரப்பில் கைதுகள்: ஷிரந்திக்கு அடுத்து தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும் கைது

உச்சக்கட்ட பரபரப்பில் கைதுகள்: ஷிரந்திக்கு அடுத்து தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும் கைது

பல ஆண்டு இதயப் பரிசோதனை

அவர் சமர்ப்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில், பல ஆண்டுகளாக அவர் செய்துகொண்ட இதயப் பரிசோதனைகள், மருத்துவமனைச் சேர்க்கைகள் மற்றும் பெற்றுக்கொண்ட சிகிச்சைகள் குறித்த விரிவான தகவல்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிருக்கு ஆபத்தாய் மாறியுள்ள இதய நோய்: சிங்கபூர் ஷொப்பிங்-க்கு மத்தியில் ஷிரந்தியின் அறிக்கை | Shiranthi S Statement Amidst Singapore Shopping

அவரது வாக்குமூலத்தின்படி, அவரது இதய நோய் குறித்த முதல் அறிக்கை 2019-ஆம் ஆண்டைச் சேர்ந்தது என கூறப்பட்டுள்ளது.

2019, செப்டம்பர் 7 அன்று தனியார் மருத்துவமனை ஒன்றில் செய்யப்பட்ட CT Coronary Angiogram (CCTA) பரிசோதனையில், இதயத்திற்கு இரத்தம் வழங்கும் மூன்று முக்கிய கரோனரி தமனிகளிலும் பிளேக் படிவுகள் மற்றும் சிறிய சுருக்கம் இருப்பது தெரியவந்தது.

மேலும், இந்த நிலை மருத்துவப் பதிவேடுகளில் மும்முனைத் தமனி நோய் (Triple Vessel Disease) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் ஆகியவை அவர் எதிர்கொள்ளும் மருத்துவ நிலைகளில் அடங்கும் என்றும் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன.

இதன்படி ஷிரந்தி ராஜபக்ச , இந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதியன்று, குமட்டல், அதீத சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் உடல் அசௌகரியம் காரணமாக மீண்டும் குறித்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு வைத்தியர் அர்ஜுனா டி சில்வா அவர்களின் கீழ் சிகிச்சை பெற்றதாக நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது - அடுத்தடுத்து திருப்பங்கள்: விசாரணைகள் ஆரம்பம்

ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது - அடுத்தடுத்து திருப்பங்கள்: விசாரணைகள் ஆரம்பம்

சிங்கப்பூரில் நடத்தப்பட்ட பரிசோதனை

அப்போது அவருக்கு ஏற்பட்ட தலைச்சுற்றல், வெர்டிகோ (Vertigo) எனக் கண்டறியப்பட்டதுடன், தனக்கு உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோயும் இருந்ததாக மருத்துவப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தரப்பால் கூறப்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்தாய் மாறியுள்ள இதய நோய்: சிங்கபூர் ஷொப்பிங்-க்கு மத்தியில் ஷிரந்தியின் அறிக்கை | Shiranthi S Statement Amidst Singapore Shopping

அதற்காக அவருக்கு ஆஸ்பிரின், கிரெஸ்டர் மற்றும் நெபிவோலோல் உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் அந்த பிரமாணப் பத்திரம் மேலும் குறிப்பிடுகிறது.

சிங்கப்பூரில் நடத்தப்பட்ட மேலதிக இதயப் பரிசோதனைகளின் போது, ​​செப்டம்பர் 21 அன்று தனது மொத்த கரோனரி கல்சியம் ஸ்கோர் (Total Coronary Calcium Score) 1022 ஆகப் பதிவானதாக அவர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதயத் தமனிகளில் உள்ள கல்சியம் படிவுகளின் அளவை அளவிடும் இந்த மதிப்பு, 400-ஐத் தாண்டினாலும் கூட அதிக ஆபத்து நிலையாகக் கருதப்படுகிறது.

இந்தப் பரிசோதனைகள், கழுத்தில் உள்ள கரோடிட் தமனியில் கல்சியம் அடைப்பு படிவுகளையும் கண்டறிந்தன.

அதன்படி, இதயநோய் நிபுணர் வைத்தியர் தினேஷ் நாயர் அவருக்கு மருந்துகளைப் பரிந்துரைத்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் நெஞ்சு வலி ஏற்பட்டால் உடனடியாகப் பயன்படுத்துவதற்காக நைட்ரோமின்ட் ஸ்ப்ரேயையும் வழங்கியுள்ளார் என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழல் சரித்திரப் பக்கங்களை மாற்றிய ஷிராந்தியின் கைது... ராஜபக்ச குடும்பத்தில் ஒரு புதிய பதிவு...

ஊழல் சரித்திரப் பக்கங்களை மாற்றிய ஷிராந்தியின் கைது... ராஜபக்ச குடும்பத்தில் ஒரு புதிய பதிவு...

சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு

தனது பிரமாணப் பத்திரத்தில், ஷிரந்தி  தனக்குத் தொடர்ச்சியான சிறப்பு மருத்துவக் கண்காணிப்பும் சிகிச்சையும் தேவை என்றும், அத்தகைய சிகிச்சை கிடைக்காவிட்டால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் நீதிமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார்.

அதே நேரத்தில், நிலுவையில் உள்ள தனது பிணை மனுவில், தான் சுமார் பத்து ஆண்டுகளாக இந்த விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும், நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு நிபந்தனைகளுக்கும் உட்படுவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

அவருக்கு இவ்வாறானதொரு அதிக ஆபத்து இருந்த நிலையில், அவர் சிங்கப்பூரில் தனியாகப் பொருட்கள் வாங்க சென்றது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அரசியல் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025