இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் கர்ப்பம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை (NCPA),தெரிவித்துள்ளது
NCPA இன் மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி, கொழும்பு ஊடகமொன்று வெளியிட்ட தகவலில் ,2025 ஆம் ஆண்டில் இதுவரை கிட்டத்தட்ட 500 சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்
2020 - 2024 க்கு இடையில், 627 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்ட துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளன என்று அறிக்கை மேலும் கூறுகிறது.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பணியகத்தின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் மட்டும் 213 சிறுவர் கர்ப்பகால வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் 10 வயது சிறுமியும் அடங்கும்.
இதற்கிடையில், பதிவு செய்யப்படாமல் இருக்கும் ஏராளமான சம்பவங்கள் இருக்கலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |