கனடாவில் பதற வைக்கும் துப்பாக்கி சூடு -காவல்துறை உயிரிழப்பு
கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒன்ராறியோ பிராந்திய காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஒட்டாவா நகருக்கு கிழக்கே உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் மேலும் இரு காவல்துறையினர் காயங்களுடன் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
நள்ளிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
2/3 Three officers arrived on the scene and all three were shot by an individual at the home. All three officers were transported to hospital in Ottawa. One of the officers has since died as a result of their injuries. The others are recovering.
— OPP East Region (@OPP_ER) May 11, 2023
புதன்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணியளவில் போர்கெட் கிராமத்திலேயே தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பில் ஒன்ராறியோ பிராந்திய காவல்துறையினர் தெரிவிக்கையில்,
லாவல் தெருவில் உள்ள ஒரு வீட்டில், துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாக ஒருவர் புகார் அளித்த நிலையில், அதிகாரிகள் தொடர்புடைய பகுதிக்கு அழைக்கப்பட்டனர். இதனையடுத்து மூன்று அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
காவல்துறையினர் மீதும் துப்பாக்கிசூடு
ஆனால் அந்த காவல்துறையினர் மூவர் மீதும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மூவரும் ஒட்டாவா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், எஞ்சிய இருவரும் குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் ஒருவர் கைதாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
