கனடாவில் நகைச்சுவை நடிகரின் உணவகம் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல்
கனடாவில் நகைச்சுவை நடிகருக்கு சொந்தமான உணவகத்தின் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இது கடந்த 4 மாதங்களில் நடந்த மூன்றாவது தாக்குதலாகும்.
இந்தியாவின் பஞ்சாபில் பிறந்து வளர்ந்த கபில் சர்மாவிற்கு,கனடாவின் சர்ரேயில் சொந்தமாக கப்ஸ் கபே என்ற உணவகம் உள்ளது. இங்கு கடந்த நான்கு மாதங்களில் மூன்றாம் முறையாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
மூன்றாவது முறையாக தாக்குதல்
முதல் துப்பாக்கிச்சூடு ஜூலை 10ம் திகதியும், 2வது துப்பாக்கிச்சூடு ஓகஸ்ட் 7ம் திகதியும் நடந்த நிலையில் தற்போது 3வதாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், சர்வதேச குற்றவாளியான லோரன்ஸ் பிஷ்னோயின் கும்பலால் நடத்தப்பட்டதாக கூறி, குல்வீர் சித்து, கோல்டி தில்லான் என்ற இருவர், சமூக ஊடகப் பதிவில் பொறுப்பேற்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக சர்ரே காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சாட்சிகளை விசாரித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
