கனடாவில் மர்ம நபர் திடீர் தாக்குதல்! அலறியடித்து ஓடிய மக்கள்..! இருவர் பலி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வான் கூவர் நகரில் மக்கள் வீதிகளில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார்.
மர்ம நபர் திடீர் தாக்குதல்

இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். ஆனால் மர்ம நபர் சுட்டத்தில் சிலர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர்.
தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது காவல்துறையினரை நோக்கி மர்ம நபர் தாக்குதல் நடத்தினார்.
இதையடுத்து அவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியானார்கள்.
இருவர் பலி

படுகாயமடைந்த 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மர்ம நபர் குறித்த விபரங்களையும், துப்பாக்கி சூடுக்கான காரணத்தையும் காவல்துறையினர் வெளியிட வில்லை.