களுத்துறையில் வர்த்தகர் படுகொலை! துப்பாக்கிதாரி வந்த கார் கண்டுபிடிப்பு
புதிய இணைப்பு
களுத்துறை, வெட்டுமகட பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் வருகை தந்த கார், தேபுவன - நேபட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த கார் தேபுவன, நேபட தபால் நிலையத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
களுத்துறையில் துப்பாக்கசிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
களுத்துறை மசூதி வீதி, வெட்டுமக்கட பகுதியில் இன்று (28) காலை சுமார் 8.59 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த துப்பாக்கிச் சுடானது, ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து காரில் வந்த நபர் ஒருவரால் நடத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் உயிரிழப்பு
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சம்மந்தப்பட்ட வர்த்தகர், நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணையை மூன்று காவல்துறை குழுக்கள் தொடங்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |