மத்திய கிழக்கில் பதற்றம் - குவைத் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
குவைத் வான்வெளியைக் குறி வைத்து நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து வருவதாக அந்நாட்டின் இராணுவ பொதுப் பணியாளர் தலைமையகம் அறிவித்துள்ளது.
குவைத் வான்வெளியில் ஊடுருவ முயற்சிக்கும் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் தற்போது பதிலடி கொடுத்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.
உயிரிழப்புகள் அல்லது சேதங்கள்
இதேவேளை எதிரியின் இலக்குகளை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறிப்பதன் விளைவாகவே வெடிப்புச் சத்தங்கள் கேட்கின்றன என குவைட் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வெளியிடப்படும் பாதுகாப்பு மற்றம் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி அறிக்கைகள் எதுவும் குவைத் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |