தென்னிலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Kalutara
Sri Lanka Police Investigation
Crime
By Thulsi
களுத்துறை தென்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று (9) காலை களுத்துறை, நாகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இந்த துப்பாக்கிச் சூட்டில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள அவரது மனைவி சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரியவராத நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்