தென்னிலங்கையில் துப்பாக்கிசூடு -காரில் பயணித்தவர் படுகாயம்
Colombo
Shooting
Sri Lanka Police Investigation
By Sumithiran
வெலிவேரிய, அம்பறலுவ வீதி, ஜூபிலி மாவத்தை பகுதியில் இன்று (05) காலை காரில் பயணித்தவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிசூட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய இருவர் மோட்டார் சைக்கிளை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு சிறிய லொறியில் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காரில் பயணித்தவர் இலக்கு

காயமடைந்தவர் உடுகம்பொல, மொடல்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெலிவேரிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி