பத்தேகமயில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூடு - சிக்கிய பயங்கர நபர்
பத்தேகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹல்பாந்தோட்டை பகுதியில் கடந்த 27ம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இன்னுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரில் வந்த கும்பலொன்று முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் மூவர் உயிரிழந்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் தற்போதைக்கு இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு இன்னுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இக்கைது நடவடிக்கையானது வலான மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நேற்று (29) இரவு பத்தேகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹல்பாந்தோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய கஹவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆவார். அவரிடமிருந்து 06 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று காலை சந்தேகநபர் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பத்தேகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |