பட்டப்பகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு..! ஒருவர் பலி
Sri Lanka Police
Galle
Attempted Murder
Sri Lanka Police Investigation
By Kanna
காலி-ரத்கம-கம்மெதகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், உயிரிழந்தவர் 48 வயதுடையவர் என்றும் குறித்த சமபவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அடையாளம் தெரியாத இருவர் வீடொன்றுக்குள் நுழைந்து குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
