நீர்கொழும்பில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்
நீர்கொழும்பு (Negombo), - துங்கல்பிட்டி, மொரவல பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று (03.07.2025) இடம்பெற்றுள்ளது.
துன்கல்பிட்டிய பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது இன்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஆகும்.
இதேவேளை, கந்தானை காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (03.07.2025) காலை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
காரில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காரில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய 'வெலி சமீர' என்ற சமீரா மனஹார எனவும் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
