உக்கிரமடையும் வன்முறை!! அலரி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு
Sri Lanka Police
Mahinda Rajapaksa
Sri Lankan Peoples
SL Protest
By Vanan
அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், சற்றுமுன் கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ள நிலையில், அலரி மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அலரி மாளிகையின் கதவுகளை உடைத்துக்கொண்டு மக்கள் பிரவேசிக்க முற்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் நீடிக்கும் நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, அலரிமாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 14 மணி நேரம் முன்
