யால வனவலங்கு சரணாலயம் அருகே துப்பாக்கிசூடு
Sri Lanka Police Investigation
Southern Province
Gun Shooting
By Jaso
யால தேசிய பூங்காவில் உள்ள கிரிந்த, பாபுவா வனவிலங்கு சோதனைச் சாவடி அருகே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. இன்று காலை (21) காரில் வந்த ஒரு குழுவினரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு குறித்த தகவலைத் தொடர்ந்து, பாபுவா வனவிலங்கு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர், துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட கார் தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை விசாரணை
விலங்குகளை வேட்டையாடுவதற்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

தப்பிச் சென்ற கார் மற்றும் சந்தேக நபர்களைத் தேடும் நடவடிக்கைகளை கிரிந்த காவல்துறை தொடங்கியுள்ளது, மேலும் இது தொடர்பாக சுற்றியுள்ள காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்