கொழும்பில் திடீரென மூடப்படும் கடைகள்!
srilanka
colombo
attack
politics
gotabaya
By S P Thas
எரிவாயு இன்றி பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிட்டுள்ளதாக கொழும்பு புறகோட்டை உணவு கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலைமை காரணமாக கடைகளை மூட நேரிட்டுள்ளதாக உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
புறக்கோட்டையில் உள்ள உணவு கடைகள், ஹோட்டல்கள் மற்றும் தேனீர் கடைகள் திடீரென மூடப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.
கொரோனாவுக்கு பின்னர் திறக்கப்பட்ட கடைகள் தற்போது மீண்டும் மூடப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் சுயதொழில் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் கிரிஷான் மாரபே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,