வைத்தியசாலைகளில் மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு - சத்திர சிகிச்சைகள் தாமதம்!
Colombo
Nuwara Eliya
Hospitals in Sri Lanka
By Kathirpriya
இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்கு முன்னர் நோயாளிகளை மயக்கமடையச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது என அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
மயக்க வாயுக்களிற்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஜயந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.
அவசர சத்திரசிகிச்சைகள்

நுவரெலியா வைத்தியசாலையில் கடந்த இரண்டு நாட்களாக அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே நிகழ்ந்ததாக கொழும்பில் நேற்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தியர் ஜயந்த பண்டார சுட்டிக்காட்டினார்.