‘குடி’ மக்களால் ஒரே நாளில் ஏற்பட்ட தட்டுப்பாடு
கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து கடந்த மாதம் 20ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், நாட்டில் உள்ள மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், மதுபானசாலைகளை நேற்று (17) முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்பட்டன.
அனுமதி வழங்கப்பட்டு ஓரிரு நிமிடங்களிலேயே, நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளில் மதுப் பிரியர்கள் மிக நீண்ட வரிசைகளில் காத்திருந்து மதுபான கொள்வனவில் ஈடுபட்டதை நேற்றைய தினம் காண முடிந்தது.
இந்த நிலையில், இன்றைய தினம் (18) மதுபானசாலைகளுக்கு சென்று, பியர் கொள்வனவு செய்ய முயற்சித்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பியதாக அறிய முடிகின்றது.
ஒரு சில வகை பியர்களை தவிர, ஏனைய அனைத்து விதமான பியர்களும் நேற்றைய தினம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதுபானசாலை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.