டொலர் தட்டுப்பாட்டு எதிரொலியால் ஏற்பட்ட நிலை -வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அமைச்சு
gas
shortage
milkpowder
dollars
By Jaso
டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிவாயு மற்றும் பால் மா இறக்குமதி தடைப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும், டொலர் நெருக்கடியால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படவில்லை என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எரிவாயு தாங்கி கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, எரிவாயு தட்டுப்பாடு விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும், பல பகுதிகளில் மக்கள் எரிவாயு வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.