இலங்கையில் சத்திர சிகிச்சை மருந்துப் பொருளுக்கு தட்டுப்பாடு
நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் பலவற்றில் சத்திர சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் லிடொகெய்ன் என்ற மருந்துப் பொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை சுகாதார அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த லிடோகெய்ன் என்ற மருந்து சத்திரசிகிச்சைகளின் போது மயக்க மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.
மயக்க மருந்து வகை
இந்த மயக்க மருந்து வகை, அனைத்து சத்திரசிகிச்சைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் இந்த மருந்து கட்டாயமாக வைத்தியசாலைகளில் கையிருப்பில் இருக்க வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மருந்துப் பொருளுக்கான தட்டுப்பாடு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் நெருக்கடிகளை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
தட்டுப்பாடு
மேலும், வைத்தியசாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் மருந்து விநியோகத்தை வரையறுப்பது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகவும் தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மருந்துப் பொருள் தட்டுப்பாடு குறித்த இந்த தகவல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அதிகாரபூர்வமாக இதுவரையில் எவ்வித பதில்களையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |