நாட்டில் ஏற்படவுள்ள தட்டுப்பாடு - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

srilanka rice bandula gunawardana shortage
By Jaso Jun 25, 2021 07:00 PM GMT
Report

இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே நாட்டில் அரிசி நுகர்வு கிடைக்கும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, நெல் ஆலை உரிமையாளர்கள் வழங்கிய தரவுகளின்படி, எதிர்காலத்தில் நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக 100,000 மெட்ரிக் தொன் அரிசி உடனடியாக இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் நன்மையைக் கருத்திற்கொண்டு 100 ரூபாய்க்குக் குறைவான விலையிலேயே அரிசியை விற்பனை செய்யவேண்டும் என்று உயர்ந்தபட்ச கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயித்தோம். அரசாங்கத்தினால் அதற்குரிய வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டதுடன் அதனைப் பின்பற்றாதோருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

அவ்வாறிருந்தும்கூட சதொச தவிர்ந்த பெருமளவான விற்பனை நிலையங்களில் நிர்ணயவிலையை விடவும் அதிக விலைக்கே அரிசி விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் தற்போது நாட்டின் நெல் மற்றும் அரிசியின் கையிருப்பு தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அது ஒருமாதத்திற்கும் குறைவான காலத்திற்கே போதுமானதாக அமையும்.

அதன்காரணமாக ஒரு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை குறைந்த விலையில் இறக்குமதி செய்வதற்குத் தீர்மானித்திருக்கிறோம். அதற்குரிய விலைமனுக்கோரல் (டென்டர்) படிவங்கள் இணையப்பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றது. இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்யவிரும்பும் எந்தவொரு தரப்பினரும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் விலைமனுக்கோரலைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

அதன்படி எவ்வித ஊழல் மோசடிகளுமின்றி குறைந்த விலையில் தரமான அரிசியை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். விலைமனுக்கோரல் படிவங்கள் பூர்த்திசெய்யப்படுவதற்கு 10 நாட்கள் வழங்கப்பட்டதன் பின்னர், இறக்குமதி தொடர்பில் நிறைவேற்றப்பட வேண்டிய ஏனைய விடயங்கள் பூர்த்திசெய்யப்படும்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியானது, உயர்ந்தபட்ச கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாக அரசாங்கத்தினால் நிர்ணயவிலையில் விற்பனை செய்யப்படும். இன்று ஜனாதிபதியை சந்தித்தபோது இதுகுறித்துக் கலந்துரையாடினேன். அப்போது அரிசியை இறக்குமதி செய்வதற்குத் தேவைப்படும் சுமார் ஒருமாதகாலப்பகுதியில் உள்நாட்டு வியாபாரிகளுக்கு இறுதி வாய்ப்பொன்றை வழங்குமாறு அவர் ஆலோசனை வழங்கினார்.

அதற்கமைவாக உள்நாட்டு வியாபாரிகள் அரிசியைப் பதுக்கிவைத்திருந்தால், அவற்றை சந்தையில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த விலையில் விற்பனை செய்யமுடியும். அவ்வாறு செய்யும்பட்சத்தில் நாம் ஒரு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்யாமல், குறைந்தளவில் மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம்.

அதுமாத்திரமன்றி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வியாபாரிகள் நிர்ணயவிலையை விடவும் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாவனையாளர் அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

அடுத்தவாரம் அந்த யோசனை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். அந்தச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் நிர்ணயவிலையை விடவும் அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்பவர்களிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணத்தை அறவிடமுடியும். மீண்டும் அதே தவறைச் செய்தால் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கவும் முடியும்.

இதுவரை காலமும் இவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு 2500 ரூபாவே தண்டப்பணமாக அறவிடப்பட்டது. அவர்கள் அதனைச் செலுத்திவிட்டு, மீண்டும் அதே தவறைச் செய்வார்கள். எனவே சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்று குறிப்பிட்டார். 

ReeCha
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்