வடக்கு,கிழக்கு உட்பட பல பகுதிகளில் நாளையதினம் கொட்டித்தீர்க்கப்போகும் மழை
நாளையதினம் இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதன்படி வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை (25) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு நாட்டின் பிற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
50 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |