யாழில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு -இருவர் கைது
arrest
police
jaffna
By Sumithiran
யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானப்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட, தடை செய்யப்பட்ட களை நாசினிகளை இவர்கள் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரிலேயே இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
யாழ். சுன்னாகத்தில் கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 1,251 பைக்கட்டுகளில் பொதியிடப்பட்ட களை நாசினிகள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மன்னார் – வங்காலை மற்றும் யாழ். சங்கானை ஆகிய பகுதிகளை சேர்ந்த 48 மற்றும் 60 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.