கொக்கட்டிச்சோலை முனைக்காட்டில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு - முனைக்காடு களப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(19) இடம்பெற்றுள்ளது.
இதன்போது 150 போத்தல் கசிப்புடன் ஒருவரை கைது செய்ததுடன் 3 இலச்சத்து 50 ஆயிரம் மில்லி மீற்றர் கோடா, உற்பத்தி உபகரணங்கள் மற்றும் மோட்டர்சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுற்றிவளைப்பு
காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்டத்தில் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அமல் எதிரிமானவின் ஆலோசனைக்கமைய காவல்துறை அத்தியட்சகர் ஜனக்க ஜெயரத்தினாவில் வழிகாட்டலில்; காவல் நிலைய பொறுப்பதிகாரி துசார அபயவர்தனா தலைமையிலான காவல்துறை குழுவினர் சம்பவதினமான இன்று அதிகாலை குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதன் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரை கைது செய்ததுடன் 150 போத்தல் கசிப்பு 3 இலச்சத்து 50 ஆயிரம் மில்லி மீற்றர் கோடா, கசிப்பு உற்பத்தி உபகரணங்கள், மற்றும் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் பெரல்கள் என்பவற்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குறித்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |